பக்கம் எண் :

358நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


வழங்கி வருகிறது. சிந்திக்காமல் பலர் ஆச்சரியக்குறி என்பதைத்
தமிழில் வியப்புக்குறி என்றனர். அதனை வியப்புக்குறி அல்லது
ஆச்சரியக்குறி என்பது தவறு. அதை ‘உணர்ச்சிக்குறி’ என்றே
கூறவேண்டும். "ஐயோ என் செல்வத்தை இழந்தேனே!" என்னும்
வாக்கியத்தில் வியப்புப் பொருள் உண்டா! இல்லை. இங்கே
இருப்பது இழப்புணர்ச்சியே. ஆதலால், ஆச்சரியக்குறி அல்லது
வியப்புக்குறி என்பதை உணர்ச்சிக்குறி என்று சொல்லுதலே பொருத்தம்
என்றறிக. நன்னூற் காண்டிகை உரையாசிரியர்களுள் ஒருவரான
ஆறுமுக நாவலரும் தமது நான்காம் பால பாடத்தின் இறுதியில்
உணர்ச்சிக் குறியீட்டை ‘மெய்ப்பாட்டிசைக்குறி’ என்றார்.
மெய்ப்பாட்டிசைக்குறி என்பதும் உணர்ச்சிக் குறி என்பதும் ஒரு
பொருளனவே. அப்படியிருந்தும், ‘இண்டர்ஜெக்ஷனை’ப் பலரும்
இன்றும் தவறாகவே கூறி வருகின்றனர்.

ஆங்கிலத்திலிருந்து கடன் வாங்கியுள்ள குறியீடுகளைத் தமிழில்
பலர் மிகவும் தவறாகவே பயன்படுத்துகின்றனர்.

கடவுளே, என்னைக் காத்தருளும், கண்ணா, இங்கே வா.

விளிக்குப் பின் மேற்குறித்தவாறு காற்புள்ளி இடுதலே
ஆங்கிலத்தில் உள்ளமுறை. அப்படியிருக்கக் கீழ்வரும்.

‘‘பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே!
ஆயர்தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்!
அரங்கமா நகரு ளானே!”

என்னும் இப்பாட்டில் விளிகளுக்குப் பின் காற்புள்ளியிடுவதற்கு
மாறாக உணர்ச்சிக் குறி இடுவதைக் காண்கிறோம். இப்படிக்