செய்வது ஏன்? விளியைப் புலப்படுத்தற்கு இவ்வாறு செய்யப்படுகிறது.
இது நீண்டகால மரபாய் விட்டது. ஆனால், கடிதங்களில் ‘அன்புமிக்க
தம்பி’ என்று விளித்து எழுதும்போது காற்புள்ளியிடுதலே
பொருத்தமாகும். மற்றப்படி உணர்ச்சிக் குறியிடுவதைச் செய்யுளுக்கு
மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டுவதேயாகும்.
‘கல்வி, அறமும் பொருளும் இன்பமும் வீடும் நல்கும்’ என்னும
வாக்கியத்தில் எண்ணும்மைகளுக்குப் பின் காற்புள்ளியிடுவது தவறு.
காற்புள்ளியிடாமல் எழுதவேண்டும். எண்ணும்மைகள் சேர்க்கும்.
காற்புள்ளியோ பிரிக்கும். இவ்வாறிருக்கக் காற்புள்ளியிடுவது
எவ்வாறு பொருந்தும்? வாக்கியத்தில் தொலைவில் எண்ணும்மை
இருந்தால். காற்புள்ளியிடலாம். சொற்களை அடுக்கடுக்காகப்
பிரிக்கும் போது எண்ணும்மை இருப்பினும் காற்புள்ளியிடலாம்.
மற்றப்படி அடுத்தடுத்து எண்ணும்மை வரும்போது காற்புள்ளியிடுதலே
கூடாது.
சிலர் வல்லெழுத்து மிக வேண்டிய இடத்தி்ல் தெரியாமையால்,
காற்புள்ளியிட்டுத் தப்பிக்கொள்ளப் பார்க்கின்றனர்.
‘சென்னையில் தோலை, பதனிட்டு, சிங்கப்பூருக்கு
அனுப்புகிறார்கள்’. இப்படிக் காற்புள்ளியிடுவது தவறு. சென்னையில்
தோலைப் பதனிட்டுச் சிங்கப்பூருக்கு அனுப்புகிறார்கள் என்று
வல்லெழுத்து மிகுமாறு எழுதவேண்டுமேயன்றிக் காற்புள்ளியிட்டு
ஏமாற்றலாகாது.
வாக்கியத்தில் நிறுத்தும் பொருட்டு வல்லெழுத்து மிகும்
இடத்திலும் ‘‘நூல்களை நன்றாகப் படித்துக், கேள்வி ஞானமும்
பெற்றுப், பேரறிஞராதல் வேண்டும்” என்று ஒருவர் வாக்கியத்தை
எழுதி வல்லெழுத்து மிகுதலின் பின் காற்புள்ளியிட்டுருந்தார். இதுவும்
தவறு. இத்தகைய இடங்களில் வல்லெழுத்து மிகச் செய்யாது,
காற்புள்ளியிட வேண்டும்.
|