காறபுள்ளி ,
1. சொற்களைத் தனித்தனியாகவோ அடுக்கு அடுக்காகவோ
பிரிக்கும்போது காற்புள்ளியிடுக.
1. அறம், பொருள், இன்பம், வீடு, என்பவை உறுதிப்
பொருள் களாகும்.
2. கபிலர், பரணர் முதலிய புலவர்கள் சங்ககாலத்தில்
இருந்தார்கள்.
இங்கே தனித்தனியாகப் பிரித்ததால் காற்புள்ளியிடப்பட்டது.
3. நட்புக்குக் குகனும் பரதனும், பிசிராந்தையாரும் கோப்பெருஞ்
சோழனும், உதயணணும் யூகியும் தலைசிறந்த எடுத்துக் காட்டுகளாகக்
கூறலாம்.
இங்கே அடுக்கு அடுக்காகப் பிரித்ததால் காற்பள்ளியிடப் பட்டது.
குறிப்பு :
கபிலபரணர் என்றும், தாய்தந்தையர் என்றும், காய்கறிகள்
என்றும் இருப்பின், அவை பன்மை ஈற்றில் முடிவதால், சொற்களுக்கு
இடையில் காற்புள்ளியிடுதலாகாது. அடுத்தடுத்து இராமரும்
இலக்குமணரும் என்றிருப்பினும் முன் இருக்கும் எண்ணும்மைக்குப்
பின் காற்புள்ளியிடுதலும் தவறாகும்.
2. வாக்கியத்தில் எழுவாய் ஒன்றாக நின்று, பல பயனிலைகளைப
பெற்றுவரும்போது, இறுதிப் பயனிலை தவிர, மற்றவற்றிற்குப்பின்
காற்புள்ளியிடுக.
தன் காதலன் கொலையுண்டு இறந்தான் என்று கேட்ட கண்ணகி
பொங்கியெழுந்தாள், விம்மினாள், அரற்றினாள், ஏங்கினாள்,
கலங்கினாள், மயங்கினாள், விழுந்தாள்.
3. அதனால், இதனால், ஆதலால், ஆகையால், ஆகவே, எனவே
என்னும் காரணக்கிளவிகளுக்குப் பின் காற்
|