பக்கம் எண் :

362நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

2. திரு. தி.வீ. இராமச்சந்தினார், எம்.ஏ., பி.எல்.,
பச்சையப்பன் அற நிலைய முன்னைய செயலாளர்.
36, கரியப்ப முதலி தெரு,
புரசை, சென்னை - 600 007.

3. திரு. ஆ.மு. கோட்டிலிங்கனார்,
20, பெருமாள் நாய்க்கன் தெரு,
புரசை, சென்னை - 600 007.

6. ஆங்கில முறையில், நாள், திங்கள், ஆண்டு இவற்றைக்
குறிக்கும் போது காற்புள்ளியிடுக.

ஜூன், 10, 1978.

தமிழ் முறையில் 1978-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 10-ஆம்
நாள் என்றும் காளயுக்தி ஆண்டு ஆனித் திங்கள் 30-ஆம் நாள்
என்றும் எழுதுவது மரபு.

7. எழுவாயானது வாக்கியத்தில் தொலைவில் இருப்பின், அந்த
எழுவாய்க்குப் பின் காற்புள்ளியிடுக.

காகம், கண்டதைத் தின்னும் பறவையாயினும். தன் உடம்பைத்
துப்புரவாக வைத்துக் கொள்கிறது.

8. மேற்கோட் குறிக்கும் முன் காற்புள்ளியிடுக.

சந்திரமதி, ‘‘நாயகனே, என் மேலுள்ள அன்பினால் அறம்
வழுவேல்” என்றாள்.

9. பொருள் மயக்கம் நீக்கித் தெளிவுபடுத்த வேண்டிய இடத்தில்
காற்புள்ளியிடுக.

1. ‘அண்ணன் தம்பி வீட்டுக்குச் சென்றதால், நான் அவரைப்
பார்க்கவில்லை’ என்னும் வாக்கியத்தில் அண்ணன் என்னும் சொல்லின்
பின் காற்புள்ளியில்லாவிட்டால் ‘அண்ணனும் தம்பியும் வீட்டுக்குச்
சென்றதால்’ என்று பொருள் மயக்கம் ஏற்படும்.