|
அண்ணன் தம்பியின் வீட்டுக்குச் சென்றதால் என்று
பொருள்பட வேண்டுமெனில்,
‘அண்ணன், தம்பி வீட்டுக்குச் சென்றதால், நான் அவரைப்
பார்க்கவில்லை’
என்று அண்ணன் என்னும் சொல்லுக்குப்பின் காற்புள்ளியிட
வேண்டும்.
2. கல்வியறிவு இல்லாத ஒருவன் கூடியிருக்கும் சபையில் பேசுவது
தகாது. இங்கும் பொருள் மயங்குகிறது. ஆதலால், கல்வியறிவு இல்லாத
ஒருவன், கூடியிருக்கும் சபையில் பேசுவது தகாது என்று ஒருவன்
என்னும் சொல்லின் பின் காற்புள்ளியிடுக. ஓருவன் என்னும் சொல்லின்
பின் காற்புள்ளியிடுவதால் பொருள் தெளிவாகிறது.
3. மாணாக்கர்கள் அளித்த பரிசுகளை உற்சாகத்துடன்
பெற்றார்கள். (பொருள் மயக்கம்)
மாணாக்கர்கள், அளித்த பரிசுகளை உற்சாகத்துடன்
பெற்றார்கள்.
இங்கே மாணாக்கர்கள் என்னும் சொல்லுக்குப் பின் காற்புள்ளி
யிட்டதால் பொருள் தெளிவாகிறது.
இத்தகைய பொருள் மயக்கம் ஏற்படும் இடங்கள்
எல்லாவற்றிலும் காற்புள்ளியிடுதல் வேண்டும்.
10. பெரிய வாக்கியங்கள் இணைக்கப்படும் பொழுது எண்ணும்மை
இருப்பினும் தெளிவுக்காகக் காற்புள்ளியிடுக.
1. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மேலைக் கடற்கரையிலுள்ள முசிறி என்னும் துறைமுகப்
|