பட்டினத்தில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து மரக்கலங்கள் வந்து
தங்கியிருந்தன என்றும், அங்கே மரக்கலங்கள் தங்குவதற்கு வசதிகள்
இருந்தன என்றும் பெரிப்ளூஸ் என்னும் நூல் கூறுகிறது.
அரைப்புள்ளி ;
1. வாக்கியத்தில் ஒரே எழுவாயானது பல பயனிலைகளைக்
கொள்ளுமாயின், இடையிலுள்ள பயனிலைகளுக்கு அரைப்புள்ளி
இடலாம்.
1. பெரும்பாலோர் பசியில்லாமலே உண்பர்; பசியாலும் உண்பர்;
கிடைத்த போதெல்லாம் உண்பர்; நாவிற்காக உண்பர்; வாய் நாற,
வயிறு நாற, குடல் நாற மலம் வைத்தும் உண்பர். - சுத்தானந்த
பாரதியார்.
2. மனித வாழ்க்கை, ஓர் ஆறு; குளம் அன்று.
3. மனிதனுடைய மனம் கண்ணாடிப் பாத்திரமன்று;
வெள்ளிப் பாத்திரமாகும்.
4. இம்முனிவர் ஒரு கல்விக் களஞ்சியம்; கேள்விக் குவியல்.
5. இரும்பு சூடாக்கினால் உருகும்; இன்றேல் உருகாது.
6. மழை இல்லா விட்டால் விளைவு இல்லை; அறுவடை
இல்லை; மக்களுக்கு உணவு இல்லை.
7. ஒளி மிகுதியானால் கண் பார்வை சுருங்கிக் கொள்ளும்;
ஒளி குறைந்தால் விரிந்து கொள்ளும்.
8. அதை மீண்டும் கிளப்புவது சிறுபிள்ளைத் தன்மையாவது
மட்டும் அன்று; நச்சுத் தன்மை யூட்டுவது மட்டும் அன்று;
விபரீதமானதுமாகும்.
9. ஒன்றுபட்டு வாழ்ந்தால் உயர்ந்து வாழலாம் என்னும்
கொள்கை வீட்டுக்கும் பொருந்தும்; வீதிக்கும் பொருந்தும்;
நாட்டுக்கும் பொருந்தும்.
10. தென்னை மரத்துக்குக் கிளைகள் கிடையா; மட்டைகளே
உண்டு.
|