பக்கம் எண் :

நிறுத்தக் குறிகள் 377

7. காலஞ்சென்ற ச.த. சற்குணர் பி.ஏ. எனக்குத் தனியாகத் தமிழ்
இலக்கிய இலக்கணங்களைக் கற்பித்தவர் அவர் சென்னையில்
பல்லாண்டுகளாய்த் தண்டமிழ் மொழிக்குப் பெருந்தொண்டு புரிந்தவர்.

அப்பெரியார் சாமுவேல் நாடாருக்கும் ஞானப்பூ அம்மையாருக்கும்
1877 ஆம் ஆண்டு மே திங்கள் 27 ஆம் நாள் பிறந்தார் தந்தையாரும்
பி.ஏ. பட்டம் பெற்றவர் அவர் சமயம் பிற சமயங்களைக் குறை கூறாத
கிறித்தவம்

ச.த. சற்குணர் சென்னை ஹாரிஸ் உயர்நிலைப்பள்ளியில் 1905
முதல் 1913 வரையிலும் சென்னைத் திருப்பவுல் உயர்நிலைப்பள்ளியில்
1914 முதல் 1927 வரையிலும் தொண்டாற்றிய பின்பு 1928ல் சென்னைக்
கிறித்தவக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்து 1936 வரை
தமிழ்த்தொண்டாற்றினார் மாணவர் பலர்க்கும் தனியாக வகுப்பு
நடத்தித் தமிழிலக்கிய இலக்கணங்களைக் கற்பித்தார் அவர்

தாம்பரத்தில் வாழ்ந்து வந்து எங்கள் அருந்தமிழப் பேராசிரியர்
1952 ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 23 ஆம் நாள் செவ்வாய்க்
கிழமை காலை 3.30 மணிக்கு இறைவன் திருவடி நீழல் எய்தினார்
அவரது திருவுடல் சென்னைக்கு அடுத்த பல்லாவரத்துக் கல்லறையில்
அன்று மாலை 5 மணிக்குக் கிறித்தவ சமய முறைப்படி அடக்கம்
செய்யப்பட்டது

அந்தோ எங்களுக்கு வழிகாட்டி வந்த கலங்கரை விளக்கு
அணைந்து விட்டதே என்று அவருடைய மாணவர்களாகிய நாங்கள்
மிகவும் வருந்தினோம்