பயன்படுத்துவது கூடாது. ஆதலால், கூடிய வரையில் குறியீடுகளைச்
செய்யுளில் இன்றியமையாத இடங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும்
என்பது உணர்க.
இக்காரணங்களால் செய்யுளிலாயினும் உரைநடையிலாயினும்
பொருள் விளக்கம் தருவதற்கு ஏற்றமுறையில், தமிழ் இலக்கண
மரபு கெடாமல், குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது
நன்கு விளங்கும்.
பயிற்சி
கீழ்வருவனவற்றில் ஏற்ற இடங்களில் காற்புள்ளி, அரைப்புள்ளி,
முக்காற்புள்ளி, முற்றுப்புள்ளி, உணர்ச்சிக்குறி, வினாக்குறி,
மேற்கோட்குறி இடுக;
1. கற்க வேண்டிய நூல்களைக் கற்பாயாக கற்றபின் கற்றதற்கு
ஏற்ப நடப்பாயாக
2. ஒன்றை வெறுத்தால் அதன் குணம் தெரியாது ஒன்றை
விரும்பினால் அதன் குறை தெரியாது.
3. இறைவனே உன்னை மறப்பறியேன் மறந்தால் உயிர்
விடுவேன்
4. கீழ்வருஞ் சொற்களுக்குப் பொருள் கூறுக.
அரை அறை மூலை மூளை மனை மணை
5. தமிழ் இறந்தபின் தமிழ் மண் மட்டும் இருந்தென்
மொழியன்றோ நாடு கலையன்றோ நாட்டின் உயிர் மொழி இறந்துபடின்
நாடும் இறந்துபடுமன்றோ உலகிற்கு ஒரு போது நாகரிகத்தை வழங்கிய
மாண்பு வாய்ந்த தமிழ் நாட்டையா மறைப்பது அதனையா மறப்பது
6. ஐயோ என்ன செய்வேன் எப்படிப் போவேன்
|