பக்கம் எண் :

நிறுத்தக் குறிகள் 375


முன்னுள்ள சொற்களோடும்; நாணாம், தாழ்குழையாம், பூணாம் புனை
மாலையாம் என்னும் பின்னுள்ள சொற்களோடும் பொருந்திப்
பொருள் விளக்குவதால், இப்பாட்டிலுள்ளது இடைநிலைத் தீவக
அணியாகும். இதில் தவறாகக் குறியீடு இட்டால் பொருள் காண
முடியாது. ஆதலால், இதில் இறுதியில் முற்றுப்புள்ளியிடுவது
குறியீடுகள் இப்பாட்டில் வேறு எங்கும் இடுவது கூடாது என்றறிக.

உண்ணாமை உள்ள (து) உயிர்நிலை ஊன் உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.

உயிர்கள் உடம்பில் நிற்றல் ஊன் (இறைச்சி) உண்ணாமை
யாலாகும்; ஒருவன் ஊன் உண்ண அவனை விழுங்கிய அளறு (நரகம்)
வெளியே விடாது.

இக்குறட்பாவிலும் ஊன் என்னும் சொல் நடுவிலிருந்து கொண்டு
‘உண்ணாமை’ என்னும் சொல்லையும் ‘உண்ண’ என்னும் சொல்லையும்
தழுவி நிற்கிறது. இதுவும் இடைநிலைத் தீவக அணி. இதிலும்
இறுதியில்தான் முற்றுப்புள்ளியிட வேண்டும்.

டைநிலைத் தீவக அணி

வியன்ஞாலம் சூழ்திசைகள் எல்லாம் விழுங்கும்
அயலாம் துணைநீத் தகன்றார்-உயிர்பருகும்
விண்கவரும் வேரிப்பொழில்புதைக்கும் மென்மயில்கள்
கண்கவரும் மீதெழுந்த கார்.

இச்செய்யுளில் இறுதியில் இருக்கும் கார் என்னுஞ் சொல்
முன்னுள்ள விழுங்கும், பருகும், புதைக்கும், கவரும் என்னும்
சொற்களோடு பொருந்திப் பொருள் விளக்குவதால், இதிலுள்ளது
கடைநிலைத் தீவக அணியாகும். இச்செய்யுளில் எங்காவது குறியீடு
இட்டால் பொருளே வாராது. எனவே, இதில் இறுதியிலிடும்
முற்றுப்புள்ளியைத் தவிர வேறு எங்கும் குறியீடுகளைப்