பக்கம் எண் :

374நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


ஆதலால், கூடியமட்டும் குறியீடுகளைச் செய்யுளில் இன்றியமையாத
இடங்களில் பயன்படுத்துவதே நன்று.

ஒரிடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது பல இடங்களில்
சென்று பொருள்களை விளக்குதல்போல, ஒரு செய்யுளில் ஒரு சொல்
ஒரிடத்தில் நின்று, அச்செய்யுளில் பல இடங்களில் நிற்குஞ்
சொற்களோடு சென்று பொருந்திப் பொருள் விளைப்பது தீவக அணி
எனப்படும். (தீவகம் - விளக்கு). இது முதனிலைத் தீவகம் எனவும்,
இடைநிலைத் தீவகம் எனவும், கடைநிலைத் தீவகம் எனவும்
மூவகைப்படும்.

முதனிலைத் தீவக அணி

முருகவேள் சூர்மா முதல் தடிந்தான்; வள்ளி
புரிகுழல்மேல் மாலை புனைந்தான்; - சரணளித்து
மேலாய வானோர் வியன்சேனை தாங்கினான்;
வேலான் இடைகிழித்தான் வெற்பு.

முருகவேள் என்னும் சொல் முதலில் நின்று தடிந்தான்.
புனைந்தான், தாங்கினான், கிழித்தான் என்னும் சொற்களோடு
பொருந்திப் பொருள் தருவதால் இச்செய்யுளிலுள்ளது முதனிலைத்
தீவக அணியாகும். இங்கே மட்டும் பொருளுக்கேற்றவாறு
அரைப் புள்ளியிடப்பட்டிருப்பதைக் காண்க.

இடைநிலைத் தீவக அணி

கரம்மருவும் பொற்றொடியாம் காலிற் கழலாம்
பொருவில் புயவலய மாகும்-அரவு அரைமேல்
நாணாம் அரற்கு நகைமணிசேர் தாழ்குழையாம்
பூணாம் புனைமாலை யாம்.

இங்கு அரவு என்னுஞ் சொல் செய்யுளின் இடையில்
நின்று, பொற்றொடியாம். கழலாம், புயவலயமாகும் என்னும்