|
தன்னுடைய மனச்சான்றுடன் போராடிய வண்ணம் அவன்
அவளைத் தன்னந் தனியே விட்டுச் சென்றான் 00000.
4. மதிப்புரைகளிலிருந்தும் நற்சான்றிதழ்களினின்றும், வேண்டிய
பகுதியை எடுத்துக் கொண்டு மற்றதை மறைக்க இவ் விலக்கியப்புள்ளி
பயன்படுகிறது.
5. இலக்கிய மணம் கமழ இது பயன்படுத்தப்படுகிறது.
கலை! என் இதயம் 000. அந்தோ! உதறிச் சிதறிக் கிடக்கிறது 000.
ஆம், இலக்கியச் சுனையில் திளைத்தாடிய இதயம்! 000.
இலக்கியச்சுனை 000 இதயம் 000, கலை எண் 000.
கதை மாந்தர்களின் மன அதிர்ச்சிகளையும் விருப்பு
வெறுப்பு களையும் இவ்விலக்கியப்புள்ளி கணப்பொழுதில் நம்
புலன்களுக்குக் காட்சியளிக்குமாறு செய்யும்.
குறியீட்டு இலக்கணம் கடினமானது. அதைப் பற்றிய விதிகளைக்
குறித்துக் கருத்து வேறுபாடுகள் உண்டு. தமிழில் குறியீடுகள் இடுவது
கோல மாவை அள்ளித் தெளிப்பது போல இருக்கிறது. கண்ட கண்ட
இடங்களில் பலர் காற்புள்ளியிடுகின்றனர். நிறுத்த வேண்டிய
இடங்கள் எல்லாவற்றிலும் காற்புள்ளியிட வேண்டுமென்பது
பழங்கொள்கை. இக்காலத்தில் அப்படி மிகுதியாகச்
செய்யவேண்டுவதில்லை. பொருள் மயக்கம் தரும் இடத்தில் மட்டும்
அப்படிச் செய்யலாம். ஆங்கிலத்தில் வல்ல அறிஞர்களும், ஆங்கில
மொழியில் குறியீடு போடுவதில் விழிப்பாகவே இருக்க வேண்டும்
என்றே அறிவுரை கூறுகிறார்கள்.
செய்யுளில் குறியீடுகளை மிகவும் விழிப்பாகப் பயன்படுத்த
வேண்டும். நடுநிலைத் தீவக அணியோ கடைநிலைத் தீவக அணியோ
உள்ள செய்யுளில் காற்புள்ளியையோ அரைப்புள்ளியையோ
தவறாக இட்டுவிட்டால் பொருளே கெட்டுவிடும்.
|