|
1. இறுதியாக - சுருங்கக் கூறுமிடத்து - நாங்கள் வீட்டுக்கே
திரும்பி வந்தோம்.
2. உடன் பிறந்தவர்களாகிய நீங்கள் உங்கள் வேற்றுமையை
மறந்து - அதில் நான் ஐயம் கொள்ளவில்லை - முன் போல
ஒற்றுமையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
பிறைக்குறி ( )
() இஃது ஒன்றனை விளக்க மற்றொரு சொல்லைப் பிறைக்
குறிகளுக்குள் எழுதப் பயன்படுவது.
1. பாரதியார் நுழைவுத்தேர்வில் (பிரவேச பரீட்சையில்) முதல்
வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
2. இன்றைக்கு எண்பது ஆண்டுகளுக்கு முன் (11-9-1921)
பாரதியார் சீதபேதியால் இறந்தார்.
பகர அடைப்புக் குறி [ ]
[ ] பிறைக்குறியை உள்ளடக்க இப்பகர அடைப்புக் குறி
பயன்படும்.
இலக்கியப் புள்ளி (000000)
முற்றுப் புள்ளிக்கும் இலக்கியப் புள்ளிக்கும் உள்ள வேற்றுமை
மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்றுமை போன்றது.
1. மேற்கோளும் பழமொழிகளும் நினைவுக்கும் வாராமற் போகும்
பொழுது இதனைப் பயன்படுத்தலாம்.
2. வெளியிடக்கூடாததற்கு இவ்விலக்கியப் புள்ளியைப் பயன்
படுத்தலாம்.
3. சிறுகதைகளில் உணர்ச்சி மிகுந்த கட்டங்கள் வரும் போது
இந்தப் புள்ளிகள் அப்படியே உணர்ச்சியைப் படம் பிடித்துக் காட்டும்.
|