பக்கம் எண் :

நிறுத்தக் குறிகள் 371


மேற்படிக் குறி (” ”)

மேற்குறித்ததே இஃது என்று காட்டுவது
மேற்படிக்குறி.

ஆடு கொடி - வினைத்தொகை.

கடிநாய் - ” ”

உடுக்குறி (*)

அடிக்குறிப்புக் காட்டுவதற்கு (*) இக்குறி பயன்படும்.

இணைப்புச் சிறுகோடு (-)

1. ஒன்றை மற்றொன்றோடு இணைப்பதற்கு (-) இக் குறியிடுக.

.......................................................... பிரயாணி-
கள் இங்கே சாப்பிடலாம்.

2. விரித்துக் கூறுவதைத் தொகுத்துக் கூறுமிடத்தும்
சிறுகோடுஇடப்படும்.

நண்பர், சுற்றத்தார், ஊரார் - எல்லாரும், என்னைக் கை
விட்டனர்.

3. ஒன்றை விளக்கிக் கூறுமிடத்தும் இக்குறியிடுவதுண்டு.

நான் விரைவில் மீண்டும் வருவேன் - பொழுது போவதற்கு
முன் வந்து விடுவேன்.

இடைப்பிறவரல் வைப்புக் குறி (-.....-)

-......- இக்குறி, ஒரு சிறு வாக்கியத்தின் முன்னும் பின்னும் உள்ள
இரு சிறுகோடுகளைக் குறிக்கும். நாம் எழுதும் வாக்கியத்தின் நடுவில்
இலக்கண முறையில் தொடர்பில்லாது, இடைப்பிறவரலாக வரும்
தனிச் சொற்றொடரை அல்லது தனி வாக்கியத்தைப் பிரிக்க இக்குறி
இடப்படும்.