பக்கம் எண் :

370நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


ஒற்றை மேற்கோட் குறி ‘ / ’

1. நேர்க்கூற்றுக்குள் இருக்கும் நேர்க்கூற்றை ஒற்றை மேற்கோட்
குறிக்குள் எழுதுவர்.

பரதன், ‘‘நான் என் செய்வேன்! தமையனார், ‘நீ போ. நான்
பதினான்கு ஆண்டுகள் கழித்தே வருவேன்’ என்று சொன்னார்.
அதனால், வந்து விட்டேன்” என்றான்.

2. பிரித்துக் காட்டுதற்கும், பிறருடையது என்று அறிவித்தற்கும்,
பழமொழிகளைத் தெரிவித்தற்கும் ஒன்றை மேற்கோட் குறியிடுவதுண்டு.

1. "வு", "வூ", ‘வொ’, ‘வோ’ என்னும் எழுத்துகள் சொல்லுக்கு
முதலில் வாரா.

2. ‘இமயம் சேர்ந்து காக்கை பொன்னிறமாகும்’ என்பது பழமொழி.

3. ‘பொய் சொல்லும் வாய்க்குப் போசனம் கிடையாது.

தொடர் விடுபாட்டுக்குறி.......

வேண்டாததை விடும்போது.... இக்குறியிடுக.

அருமைத் தமிழ் மாணாக்கர்களே, உங்கள் நாட்டை
நோக்குங்கள், ........ குற்றம் குறைகள் இருப்பின் மன்னிப்பீர்களாக!

விடுகுறி (’)

ஒன்றை விட்டுவிடும்போது (’) இக் குறியிடுக.

15-8-"99. - இங்கே 1999-ல் உள்ள 19 என்னும் ‘எண்’
விடப்பட்டது காண்க.