|
3. உணர்ச்சியுடன் விளிக்கும் போது உணர்ச்சிக் குறியிடுக.
தம்பி! உன் நாவை அடக்கிப் பேசு!
இஃது இரட்டை மேற்கோட்குறி, ஒற்றை மேற்கோட்குறி
என இருவகைப்படும்.
இரட்டை மேற்கோட் குறி ‘‘ / ”
ஒருவர் கூறிய சொற்களை அப்படியே எடுத்தாளும்போது
இரட்டை மேற்கோட் குறியிடப்படும். நேர்க்கூற்றின் தொடக்கத்திலும்
முடிவிலும் இரட்டை மேற்கோட்குறியிடுக.
நெடுஞ்செழியன், ‘‘இப்போரில் நான் வெல்லாமற் போவேனாயின்
என் குடிகள் பழி தூற்றும் கொடுங்கோலனாவேனாக!“ என்று
சூளுரைத்தான்.
குறிப்பு: சூளுரைத்தான், என்றான் என்னும் சொற்களுக்குப்
பின் மேற்கோட் குறியிடுவது தவறு.
கண்ணன் கூறியதாவது, ‘‘நான் வாங்கியதைக் கொடுத்து
விட்டேன்” என்றான். இதுவும் தவறு.
கண்ணன், ‘‘நான் வாங்கியதைக் கொடுத்துவிட்டேன்”
என்றான் - என்றிருக்க வேண்டும்.
"கூறியதாவது" என்பது வேண்டுவதில்லை.
நேர்க்கூற்றுத் தொடக்கத்தின் முன் காற்புள்ளியிட
மறத்தலாகாது.
2. மேற்கோளைக் காட்டும்போது மேற்கோட்குறியிடுக.
"அறம்தலை நின்றார்க்கு இல்லை அழிவு" என்றார் கம்பர்.
ந25
|