|
3. இங்கு வந்தது எது? இங்கு வந்தவை எவை? நீ சொன்னது
யாது? நீ சொன்னவை யாவை?
4. உனக்குப் பொறுப்பு ஏது?
5. ஒருவர் பண்பாடு பெறாமலிருந்தால், அவர் கல்வி கற்றதனால்
பயன் என்?
6. உமக்கு என்ன வேண்டும்?
7. நீ ஏன் நேற்றுப் பள்ளிக்கு வரவில்லை?
உணர்ச்சிக் குறி !
தமிழர்கள், உணர்ச்சியுடைவர்களாயினும் உணர்ச்சியை வெளிப்
படையாகக் காட்ட மாட்டார்கள். மனைவியிடம் மிகுந்த அன்புள்ள
தமிழன் ஆங்கிலேயரைப் போல மனைவியுடன் கைகோத்துப்
போக மாட்டான். உணர்ச்சியை அடக்கி வைப்பது தமிழர் பண்பாடு.
ஆதலால், கண்டவாறு உணர்ச்சிக் குறியை !, !!, !!! என்று
இவ்வாறெல்லாம் போடுவது தமிழர் நாகரிகத்துக்கு மாறானது.
உண்மையான உணர்ச்சி காட்டும் இடத்தில் மட்டும் உணர்ச்சிக்
குறியிடுக. நம்ப முடியாது என்பதையும் இகழ்ச்சியுடையது
என்பதையும் காட்டுமிடங்களிலும் உணர்ச்சிக் குறியிடுதல்
உண்டு.
1. உணர்ச்சி காட்டும் இடங்களில் உணர்ச்சிக் குறி இடலாம்.
1. அந்தோ! பல தமிழ் நூல்கள் முற்காலத்தில் அழிந்தனவே!
2. அவர்தம் பெருமை என்ன! என்ன!
2. உணர்ச்சியுடன் வரவேற்கும் போதும் வாழ்த்தும் போதும்
சபிக்கும் போதும் உணர்ச்சிக் குறியிடுக.
1. மாபெருந் தலைவர் நேரு, வருக! வருகவே!
2. வாழி! வாழி! தமிழ்நாடு வாழியவே!
3. என் வாழ்வைக் கெடுத்த பாவி ஒழிக!
|