பக்கம் எண் :

நிறுத்தக் குறிகள் 367

1. நச்சினார்க்கினியர் சிந்தாமணிக்கு உரையெழுதியுள்ளார்.

2. நீ உள்ளே வா.

2. சொற்குறுக்கத்திற்கு முற்றுப் புள்ளியிடுக.

திரு. உயர்திரு. தவத்திரு. கி.மு. கி.பி.

(முறையே திருவாளர், உயர்திருவாளர், தவத்திருவாளர்,
கிறிஸ்து பிறப்பதற்கு முன், கிறிஸ்து பிறந்த பின் என்பனவற்றின்
குறுக்கங்களே மேற்குறித்தவை)

1. திரு. மணி. திருநாவுக்கரசு முதலியார்.

(திரு - திருவாளர், மணி - மணிமங்கலம்.)

2. திரு. திரு.வி.க. (திரு - திருவாளர், திரு-திருவாரூர்,
வி-விருத்தாசல முதலியார் (தந்தை பெயர்), க-கலியாணசுந்தர
முதலியார்).

3. ஆங்கிலப் பட்டத்தைக் குறிக்கும் எழுத்துகளுக்குப்
பின் முற்றுப்புள்ளியிடுக.

திரு. ச.த. சற்குணர், B.A.,

வினாக்குறி ?

வினவும் இடங்களில் வினாக்குறியிடுக. ஆங்கிலத்தை விடத்
தமிழில் வினாவை அமைப்பது சிறு குழந்தைகளும் செய்யக்கூடிய
அளவு எளிமையாக இருக்கும். எ, ஏ, யா, ஆ, ஓ ஆகிய இவை
வினா எழுத்துகள். வந்தான் என்னும் சொல்லோடு ‘ஆ’ சேர்த்தால்
‘வந்தானா?’ என்றும் ‘ஓ’ சேர்த்தால் ‘வந்தானோ?’ என்றும் வினாக்கள்
உண்டாகி விடும். எது, எவை, யாது, யாவை, ஏது, ஏன், என்ன, என்
ஆகிய இவை வினாச் சொற்கள்.

1. பாடுபட்டால் பலன் இல்லாமல் போகுமா?

2. முயற்சியுடையார் இகழ்ச்சி அடைவாரோ?