முக்காற்புள்ளி :
1. வாக்கியத்தில் கூறியதொன்றை விரித்துக்கூறும் போது
முக்காற் புள்ளியிடலாம்.
வாழ்வு இரு திறத்தது: ஒன்று உயிர் வாழ்வு;
மற்றொன்று உடல் வாழ்வு. - திரு.வி.க
2. முக்காற் புள்ளியுடன்:- இதுபோலக் கோடிட்டு எழுதுவதும்
உண்டு.
பொருள் கூறுக:- களிறு, சேதா.
3. எடுத்தாண்டிருக்கும் மேற்கோள் இன்ன நூலின் இருக்கிறது
என்பதைக் காட்ட முக்காற்புள்ளி பயன்படும்.
குறள் - அதிகாரம் 8:6
4. வாக்கியத்தில் ஒரு கருத்தை விளக்கவோ ஆதரிக்கவோ
மற்றொரு கருத்து அதைத் தொடர்ந்து வருமாயின், முன் கருத்து
முடியுமிடத்தில் முக்காற் புள்ளியிடுக.
1. உடல் நலத்தைப் பாதுகாக்க எல்லா வகைகளிலும் முயற்சி செய்:
உடல் நலம் இல்லாவிட்டால் வாழ்க்கையில் இன்பமே இராது.
2. சிலர் தாமிருக்கும் பகுதியின் சூழ்நிலைச் சுகாதாரத்தைப்
பற்றிக் கவலைப்படாது வாழ்வர்; அப்படியிருத்தலும் தவறு.
3. ஒன்றைக் கூர்ந்து சிந்திக்க நூல்களைப் படித்துப் பழகு;
அதுவே கல்விக்கு மிகவும் வேண்டுவது.
முற்றுப்புள்ளி .
1. வாக்கிய முடிவில் முற்றுப்புள்ளியிடுக. பொருள் முடிந்திருப்
பதைக் கண்களுக்கு எடுத்துக் காட்டுவது முற்றுப்புள்ளி.
|