பக்கம் எண் :

கட்டுரை எழுதுதல் 379


இலக்கணப் பிழை, கருத்துப் பிழை ஆகிய இப்பிழைகள் இல்லாது
நன்முறையில் மதிக்கத்தக்க வகையில் கட்டுரைகள் எழுதுமாறு
பயிற்சி பெறவேண்டுவது இன்றியமையாதது. கட்டுரை எழுத
விரும்புகிறவர்கள் மேலும் மேலும் நூல்களைப் படித்து அறிவை
நாளுக்கு நாள் பெருக்கிப் பிழையின்றி எழுதப் பயிற்சி பெறவேண்டும்.

‘‘உள்ளத்தில் தோன்றுவதை முறையின்றிக் கட்டுரைப்பது கட்டுரை”
என்று ஆங்கிலப்பேரறிஞர் ஜான்சன் கூறினார். ஆனால், அக் கருத்தை
நாம் இக்காலத்தில் ஏற்றுக் கொள்வதற்கில்லை. ஒரு பொருளைக்
குறித்து வரையறுத்து, நூலெழுதும் முறையில் இல்லாமல், சிறிய
அளவில் பொருட் செறிவுடன் விளக்கமாக யாரும் படிக்கக் கூடிய
நடையில் அமைந்திருப்பதே கட்டுரையாகும்.

அரசியல், அறிவியல், தத்துவம், ஒழுக்கம், இலக்கியம்
முதலியவற்றைக் குறித்துக் கட்டுரைகள் எழுதலாம். பொதுவாகக்
கட்டுரைகள் நீண்டிருத்தலாகாது; எளிதாக படிக்கத் தக்கனவாக
இருக்க வேண்டும்; நகைச் சுவையுடன் கூடியதாக இருக்கலாம்;
ஆனால், பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

எந்தப் பொருளைக் குறித்துக் கட்டுரை எழுதினாலும்
அழகிய தொடக்கமும் இனிய முடிவும் சிறப்பாக அமைய வேண்டும்.
தொடக்கமும் முடிவும் நன்றாக இல்லையானால் கட்டுரை சுவையாக
இராது. ஆதலால், எழுத்தாளர்கள் சிலர் மிகமிகப் பாடுபட்டுச் சிந்தனை
செய்து தொடக்கமும் முடிவும் அமைப்பதுண்டு. அறிஞர்கள்
தொடக்கத்திலும் முடிவிலும் மிகுந்த கவனம் செலுத்தகிறார்கள்.
கட்டுரையில் சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நன்மொழி
புணர்த்தல், நவின்றோர்க்கு இனிமை முதலிய அழகுகள்
இருக்கவேண்டும். கூறியது கூறல், மாறு கொளக் கூறல், மற்றொன்று
விரித்தல். உலக மலைவு முதலிய குற்றங்கள் இருத்தல் கூடாது.
இலக்கணப் பிழைகள் இல்லாதவாறு கட்டுரைகள் எழுதவேண்டும்.
ஒன்றைக் குறைத்துக் கூறவோ