பக்கம் எண் :

392நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


வடமொழி சொற்களையும் எழுதுவது பிழையே. வழக்கு வீழ்ந்த
சொற்களைப் பயன்படுத்துவதும் நன்றன்று. உவன் என்பது வழக்கு
வீழ்ந்த சொல். கூடிய மட்டும் தமிழ்ச் சொற்களைக் கொண்டே எழுதுக.
மிகவும் இன்றியமையாத இடங்களில் வல்கனைட், பிளாட்டினம், டயர்,
ரப்பர், பேனா, பென்சில், கொக்கோ, சோடா, பெப்பர்மிட், ஆப்பில்,
சிகரெட் போன்ற பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தலாம்.

மேற்கோள் : வீணாக மேற்கோள்களைக் கொட்டி விடுவது
அறிவுக் குறைவைக் காட்டும் என்பர். பழைய காலத்தில் மேற்
கோள்களை மிகுதியாய்ச் சேர்த்து எழுதுவது வழக்கமாயிருந்தது.
இக்காலத்தில் இன்றியமையாது தேவைப்படும் இடங்களில் மட்டும்
வலியுறுத்தும் பொருட்டு மேற்கோள்களைப் பயன்படுத்த வேண்டும்.

இனிய சொற்றொடரும் மரபும்: ஆங்காங்கே இனிய சொற்றொடர்
களையும் மரபுத் தொடர்களையும் இனிமைக்காகப் பயன்படுத்தலாம்.
வேண்டுமென்று அவைகளை வலிந்து புகுத்துதல் கூடாது.

பழமொழிகள் : உரைநடையில் வேண்டிய இடங்களில் மட்டும்
பழமொழிகளைப் பயன்படுத்தலாம். அவற்றையும் அளவுக்குமேல்
பயன்படுத்தல் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும்
நஞ்சாகும். வேண்டுமென்றே பழமொழிகளைப் புகுத்தெழுதுதலும்
கூடாது.

அணிகள் : உரைநடையில் விளக்கத்திற்காகவும் சுருக்கத்திற்
காகவும் அழகுக்காகவும் உவமை, உருவகம் முதலிய அணிகளை
அமைத்து எழுதலாம்.

சந்திகள் : மிகவும் இன்றியமையாத சந்திகளையே பயன்படுத்த
வேண்டும். கடின சந்திகளையும் ஐயம் உண்டாக்கும் சந்திகளையும்