பக்கம் எண் :

4நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


தொன்மையானது என்பது நன்கு விளங்கும்.

மொழி நூலறிஞரான தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள்
துணைவேந்தர் டாக்டர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள், தமிழ்மொழியைப்
பற்றிக் கூறியது பின்வருமாறு :

"தமிழ் மொழிக்கு எழுத்துருவில் ஏறத்தாழ 2500 ஆண்டு வரலாறு
உண்டு. பேச்சுருவில் ஏறத்தாழ 5000 ஆண்டு பழக்கம் உண்டு....

"ஏறத்தாழ 2500 ஆண்டாயினும் பழைய இலக்கியங்களாகிய சங்க
இலக்கியங்களும் தொல்காப்பிய இலக்கணமும் இன்று படித்தாலும் பொருள்
புரிவது கடினமன்று. இது பிற மொழிகளுக்கு இல்லாத சிறப்பாகும்.
இலத்தீனும் சமஸ்கிருதமும் பழம் பெருமையுடையவை. ஆனால்,
அவை ஆய்வாளர்களின் மூலம், அகரமுதலிகள் (அகராதிகள்)
மூலம் பொருள் அறியும் நிலையில் இருக்கின்றன. கிரேக்கமும்
அவற்றைப் போன்றதுதான். இன்றுள்ள கிரேக்க மொழிக்கும்
பண்டைய கிரேக்கத்திற்கும் நிறைய வேற்றுமை உண்டு. இன்றைய
கிரேக்க மொழி பேசுவோர் பண்டைய கிரேக்கத்தைத் தெரிந்து
கொள்வது முடியாது. ஆனால், பண்டைய தமிழை ஓரளவு கல்வி
அறிவுள்ள தமிழ்ச் சிறுவனும் பொருள் தெரிந்து கொள்வது கடினமன்று."

தமிழ் இலக்கியங்களும் பழமையுடையனவே. இது குறித்துத் தமிழ்
ஆராய்ச்சிப் பேராசிரியர் காலஞ் சென்ற திரு. வையாபுரிப் பிள்ளை
அவர்கள்,

"தெலுங்கு மொழியை எடுத்துக் கொள்வோமாயின், அதற்குரிய
ஆதி இலக்கியமாகிய நன்னைய பாரதம் என்னும் நூல் கி.பி. 11-ஆம்
நூற்றாண்டில் தோன்றியதாகும். கன்னட மொழியை எடுத்துக்
கொள்வோமாயின், அதற்குரிய ஆதி இலக்கியமாகிய கவிராஜ மார்க்கம்
என்னும் நூல் கி.பி 9-ஆம் நூற்றாண்டில் தோன்றியதாம். மலையாள
மொழியை எடுத்துக் கொள்வோமாயின், அதற்குரிய ஆதி இலக்கியமாகிய
இராமசரிதம் என்னும் நூல் 14-ஆம் நூற்றாண்டில்