இப்படிப் பார்த்தால் தமிழ்மொழி குறைந்தது இன்றைக்கு 3500
ஆண்டுகளுக்கு முன் தோன்றி வளர்ச்சியடைந்திருத்தல் வேண்டும்
என்று கொள்ளலாம்.
தொன்மை மிக்க சங்க இலக்கியமாகிய புறநானூறு என்னும்
நூலில் உள்ள இரண்டாம் செய்யுளில் முரஞ்சியூர் முடிநாகராயர்,
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனை
"அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்"
என்று கூறி வாழ்த்தியுள்ளார்.
அந்நூலுக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர், "அசைத்த
தலையாட்டம் அணிந்த குதிரைகளையுடைய பாண்டவர் ஐவருடனே
சினந்து நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந் தும்பையையுடைய
துரியோதனன் முதலாகிய நூற்று வரும் பொருது போர்க்களத்தின்கண்
படுந்துணையும் பெருஞ்சோறாகிய மிக்க உணவை இருபடைக்கும்
வரையாது வழங்கினோய்" என்று உரை கூறியுள்ளார். இருபடை
வீரர்களுக்கும் பெருஞ்சோறு வரையாது வழங்கியதால் இத்தமிழகச்
சேரமான், பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் எனப் பெயர் பெற்றான்.
ஈண்டுக் குறிப்பிட்டுள்ள போர் மகாபாரதப் போர் என
வெள்ளிடைமலையென விளங்கும். இப்பாரதப் போர் நடந்த காலம
கி.மு.1432 என்பர் வரலாற்றாசிரியர். ஆக இச்சேரவேந்தன்
உயிரோடிருந்த காலத்தில் இப்பாடல் பாடியிருத்தல் வேண்டும்.
அம்மன்னன் இறந்த பின் இதனைப் பாடியிருத்தல் இயலாது.
எனவே இப்பாடல் பாடிய காலம் இற்றைக்கு ஏறக்குறைய 3430
ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். மொழி தோன்றி வளர்ந்து செய்யுள்
இயற்றிய நிலையை அடைய 1000 ஆண்டுகளாவது ஏற்பட்டிருத்தல்
வேண்டும். எனவே தண்டமிழ் மொழி ஏறத்தாழ 4430 ஆண்டுகள்
|