ஒ
ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டுகிறது.
ஒருவர் அறிந்தால் இரகசியம்; இருவரறிந்தால் அம்பலம்.
ஒருவர் பொறை இருவர் நட்பு.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
ஒழுங்கு ஊராளும்.
ஒற்றுமையே பலம்.
க
கங்கையில் முழுகினாலும் காக்கை அன்னமாகுமா?
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.
கடுங்காற்று மழை கூட்டும்; கடுஞ் சிநேகம் பகை காட்டும்.
கழுதை அறியுமா கந்தப்பொடி வாசனை?
கடித்த பாக்குக் கொடாத சிற்றப்பன் கடைத்தெரு வரையில்
வந்து வழி விட்டானாம்.
கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தானாம்.
கட்டோட போனால் கனத்தோடே வரலாம்.
கண்டது கற்கப் பண்டிதனாவான்.
கண்ணின் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?
கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி.
கம்புக்குக் களையெடுக்கப் போய்த் தம்பிக்குப் பெண் கேட்டானாம்.
கரும்பு தின்னக் கூலி வேண்டுமா?
|
|
|