பக்கம் எண் :

408நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
கல்லுளி மங்கன் போனவழி காடு மேடெல்லாம் தவிடுபொடி.
கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
கள்ள மனம் துள்ளும்
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.
காக்கை நிறத்தை மாற்றினாலும் கடன் வாங்குங்
குணத்தை மாற்ற முடியாது.
காட்டுக்குப் போனாலும் கூட்டுறவு கூடாது.
காடிக் கஞ்சியென்றாலும் மூடிக் குடி. (காடி-புளிப்பு)
கார்த்திகைக்கு மேல் மழையும் இல்லை, கர்ணனுக்கு மேல்
கொடையும் இல்லை.
காலம் போகும்; வார்த்தை நிற்கும்.
கால விளம்பனம் சாலவும் தீதே. (விளம்பனம் - தாமதம்)
காலையில் செல் பூத்தால் அடுத்த மழை அடங்கும்.
காலைச் சுற்றிய பாம்பு காலைக் கடிக்காமல் விடாது.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
காய்ந்த வானம் பேய்ந்தால் விடாது.
கிட்ட நெருங்க முட்டப்பகை.
கிளியை வளர்த்துப் பூனைக்குக் கொடுக்கவா?
குந்தித் தின்றால் குன்றும் மாளும்.
குப்பையிலே கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
குரைக்கும் நாய் வேட்டைக்கு உதவாது.
குருவியின் தலையில் பனங்காய் வைத்தால் தாங்குமா?
குறையச் சொல்லி நிறைய அள.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.