பக்கம் எண் :

பழமொழிகள் 409


குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளலாமா?
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்,
கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் வானைப் பிளந்து
வைகுண்டம் காட்டுவது எப்படி?
கெஞ்சிடில் மிஞ்சுவர்; மிஞ்சிடில் கெஞ்சுவர்.
கெடுவான் கேடு நினைப்பான்.
கெட்டிகாரன் புளுகு எட்டு நாளில் தெரியும்.
கெண்டையைப் போட்டு வராலை இழு.
கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?
கை தொடின் மஞ்சளும் கரியாகும்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
கைக்காடையை விட்டுவிட்டுக் காட்டுக் காடையைப் பிடிப்பதா?
கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
கொல்லான் தெருவில் ஊசி விலை போகுமா?
கொல்லான் பட்டறையில் நாய்க்கு என்ன வேலை?
கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது.
கொடிக்குக் காய் கனக்குமா?
கொடுத்தால் கட்டபொம்பு கொடுக்க வேண்டும்;
விளைந்தால் கரிசல் காடு விளையவேண்டும்.
கோத்திரம் அறிந்து பெண்ணைக்கொடு;
பாத்திரம் அறிந்து பிச்சையிடு.
கோல் எடுத்தால் குரங்கும் ஆடும்.
கோழி மிதித்துக் குஞ்சு முடமாகுமா?
கோழி போனதுமல்லாமல் குரலும் போயிற்று.