பக்கம் எண் :

410நல்ல தமிழ் எழுத வேண்டுமா?




சகுனம் நன்றாக இருந்தாலும் விடிய விடியத் திருடாதே.
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?
சட்டி சுட்டது கைவிட்டது.
சனமொழி தெய்வமொழி (சனம் - மக்கள்)
சற்சனர் உறவு சர்க்கரைப்பாகு.
சனம் சனத்தோடு சேரும்; சந்தனத்தோடு கருப்பூரம் சேரும்.
சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் என்ன செய்யும்?
சிதம்பரத்துப் பிள்ளைக்குத் திருவாசகம் ஓத வேண்டுமா?
சித்திரமும் கைப்பழக்கம்: செந்தமிழும் நாப்பழக்கம்.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
சிறுகக் கட்டிப் பெருக வாழ்.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்.
சுண்டைக்காய் காற்பணம்; சுமைகூலி முக்காற் பணம்.
சுத்தம் சோறு போடும்.
சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும்?
சுவரோடாயினும் சொல்லியழு.
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானம் ஆண்டி.
சூடு கண்ட பூனை அடுப்படிக்குப் போகாது.
செங்கோலுக்கு முன்னே சங்கேதமா? (சங்கேதம் - முன்னேற்பாடு)
செவிடன் காதில் சங்கு ஊதின கதையாகிறது.
செத்தவன் கண் செந்தாமரை
சேரப் போனால் செடியும் பகை.
சொல்லாது பிறவாது. அள்ளாது குறையாது.