சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
சொப்பனத்தில் கண்ட அரிசி, சோற்றுக்கு ஆகுமா?
சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.
சோழியன் குடுமி சும்மா ஆடாது.
த
தகப்பன் வெட்டின கிணறு என்று தலைகீழாய் விழலாமா?
தம்பியுடையான் படைக்கு அஞ்சான்.
தருமம் தலை காக்கும்.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று.
தவத்துக்கு ஒருவர்; கல்விக்கு இருவர்.
தவிட்டுக்கு வந்த கைதான் தனத்துக்கும் வரும்.
தடியெடுத்தவன் தம்பிரான்.
தனக்கு மிஞ்சியல்லவோ தருமம்?
தன் பலம் கொண்டு அம்பலம் ஏறவேண்டும்.
தன் நெஞ்சே தன்னைச் சுடும்.
தனி மரம் தோப்பாகாது.
தாய்க்குப் பின் தாரம்.
தாய்க்கு ஒளித்த சூலா?
தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்.
தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.
தான் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்.
தாயும் மகளுமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு.
தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும்.
திட்டிச் செத்தாரும் இல்லை; வாழ்த்தி வாழ்ந்தாரும் இல்லை.
|
|
|