பக்கம் எண் :

412நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


தினை விதைத்தவன் தினையையே அறுப்பான். வினை
விதைத்தவன் வினையையே அறுப்பான்.
தின்றவன் தின்றால் திருக்கணங்குடியான் தண்டம் இறுப்பானா?
தீவட்டிக்காரனுக்குக் கண் தெரியாது.
துட்டரைக் கண்டால் தூர விலகு.
துணிந்தவனுக்குத் துக்கமில்லை.
துள்ளின மாடு பொதி சுமக்காது.
துறவிக்கு வேந்தன் துரும்பு.
தூர இருந்தால் சேர உறவு
தென்னைமரத்தில் தேள் கொட்டினால்,
பனை மரத்தில் நெறி பிடித்ததாம்.
தேளுக்கு மணியம் கொடுத்தால்,
நிமிஷத்துக்கு நிமிஷம் கொட்டுமாம்.
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்.
தொட்டுப் பார்த்தால் தோட்டியும் உறவு.
தோட்டி போல உழைத்துத் துரை போலச் சாப்பிட வேண்டும்.



நகைவிரும்பாத பெண்களும் இல்லை;
குகை விரும்பாத இருளும் இல்லை.
நடந்தால் நாடெல்லாம் உறவு; படுத்தால் பாயும் பகை.
நம் வீட்டு விளக்கென்று முத்தமிட்டுக் கொள்ளுகிறதா?
நல்ல மாட்டிற்கு ஒரு சூடு; நல்ல பெண்ணிற்கு ஒரு சொல்
நல்லினத்திலும் நட்பு வலிது.
நல்ல செயலுக்கு நானூறு இடையூறு வரும்.
நாமொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.
நாய் நக்கிச் சமுத்திரம் குறையுமா?