நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.
நாளைக்குக் கிடைக்கும் பலாக்காயினும் இன்றைக்குக்
கிடக்கும் களாக்காய் மேல்.
நாள் செய்வது நல்லோர் செய்யார்.
நாமே ஆற்றிக் கொள்ளாத துன்பத்தை நாள் ஆற்றி விடும்.
நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்.
நித்தியம் கிடைக்குமா அமாவாசைச் சோறு?
நிழலருமை வெயிலில் போனால் தெரியும்.
நிறை குடம் நீர் தளும்பாது.
நீராழம் கண்டாலும் நெஞ்சாழம் காண முடியாது.
நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.
நீரடித்து நீர் விலகாது.
நெய்வேலியில் போய் நிலக்கரி விற்பதா?
நெருப்பையும் கறையான் அரிக்குமோ?
நேசமில் வதுவை (திருமணம்) நாச காரணம்.
நூறு நாள் ஓதி ஆறு நாள் விடத் தீரும்.
நூலைப் போலச் சேலை; தாயைப் போலப் பெண்.
நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
நொறுங்கத் தின்றால் நூறு வயது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
ப
பகலில் பசுமாடு தெரியாதவனுக்கு;
இரவில் எருமை மாடு தெரியுமா?
பசித்தவன் தின்னாததும் இல்லை;
பகைத்தவன் சொல்லாததும் இல்லை.
|
|
|