| 414 | நல்ல தமிழ் எழுத வேண்டுமா? |
பட்டப் பகலிலே பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே.
பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்.
பணக்காரர் பின்னால் பத்துப் பேர்.
பணம் இல்லாதவன் பாய்மரம் இல்லாத கப்பலைப் போன்றவன்.
(ஜப்பானியப் பழமொழி)
பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
பதறாத காரியம் சிதறாது.
பல நாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
பல துளி பெரு வெள்ளம்.
பல்லில் பழுது ஏற்பட்டால் பாடைக்கு முன்பணம் கொடுப்பது
போலாகும். (சீனப் பழமொழி)
பலாப் பழத்துக்கு ஈ பிடித்து விடவா?
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
பனி பெய்தால் மழை இல்லை; பழம் இருந்தால் பூ இல்லை.
பன்றியுடன் கூடும் கன்றும் கெடும்.
பாம்பென்றால் படையும் நடுங்கும்.
பாம்பறியும் பாம்பின கால். (பாம்பின - பாம்பினுடைய)
பாராத காரியம் பாழ்.
பார்த்தால் பூனை; பாய்ந்தால் புலி.
பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்.
பாவம் ஓரிடத்தில்; பழி ஓரிடத்தில்.
பாழாய்ப் போகிறது பசுவின் வயிற்றிலே.
பாழூருக்கு நரி ராசா.
பிடித்தால் கற்றை; விட்டால் கூளம்.
|
|
|