பிள்ளைச் சீர் கொள்ளக் கிடைக்குமா?
புத்திமானே பலவான்.
புலி வேட்டைக்கு அடிக்கும் தவிலடியை எலி வேட்டைக்கு
அடிக்கலாமா?
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
பூவோடும் சேர்ந்த நாரும் மணம் பெறும்.
பூனைக்குக் கொண்டாட்டம்; எலிக்குத் திண்டாட்டம்.
பெண்ணுக்கு மாமியாரும் பிள்ளைக்கு உபாத்தியாயரும்.
பெண் என்றால் பேயும் இரங்கும்.
பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
பெண் புத்தி பின் புத்தி.
பெற்ற தாய் செத்தால், பெற்ற அப்பன் சிற்றப்பன்.
பெற்றதெல்லாம் பிள்ளையா? இட்டதெல்லாம் பயிரா?
பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு.
பெற்றவளுக்கு தெரியும் பிள்ளை அருமை; பெறாத
மலடிக்கு என்ன தெரியும்?
பேசாதிருந்தால் பிழை ஒன்றுமில்லை.
பேசப் புகுந்தாயோ சாகப் புகுந்தாயோ?
பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடையாது.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
ம
மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயம்.
மண் குதிரையை நம்பி ஆற்றைக் கடப்பது போல இருக்கிறது.
மந்திரத்தால் மாங்காய் விழுமா?
|
|
|