பக்கம் எண் :

416நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


மந்திரம் கால்; மதி முக்கால்.
மயிலே மயிலே, என்றால் இறகு கொடுக்குமா?
மரம் இல்லாத நிலம் உறவினர் இல்லாத ஊர் மாதிரி.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
மலை கல்லி எலி பிடிக்கிறதா?
மலைக்குப் போனாலும் மைத்துனன் உறவு வேண்டும்.
மலையில் விளைந்தாலும் உரலில்தான் மசிய வேண்டும்.
மனமிருந்தால் வழி உண்டு.
மனக்கவலை பலக்குறைவு.
மாடு மேய்க்காமல் கெட்டது; பயிர் பார்க்காமல் கெட்டது.
மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால்
பொன் குடம்.
மாமியார் மெச்சிய மருமகள் இல்லை; மருமகள் மெச்சிய
மாமியார் இல்லை.
மார்கழி பனி மச்சு வீட்டைத் துளைக்கும். தைப் பனி
தரையைப் பிளக்கும்.
மின்னுக்கெல்லாம் பின்னே மழை.
மின்னுவன எல்லாம் பொன்னா?
மீன் குஞ்சுக்கு நீச்சுப் பழக வேண்டுமா?
முட்ட நனைந்தவனுக்கு ஈரம் இல்லை; முழுதும்
கெட்டவனுக்குத் துக்கம் இல்லை.
முட்டாளுக்குக் கோபம் முக்கின் மேலே.
முதற் கோணம் முற்றும் கோணல்.
முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா.