முள்ளாலே முள்ளை எடுக்க வேண்டும்.
முள்ளின் மேலே சீலையைப் போட்டால்
மெள்ள மெள்ள வாங்க வேண்டும்.
முழுப் பூச்சுணைக் காயைச் சோற்றில் வைத்து மறைக்க முடியுமா?
முழுதும் நனைந்தவளுக்கு முக்காடு வேண்டுமா?
முன் ஏர் போன வழியே பின் ஏர் போகும்.
முன் கை நீண்டால் முழங்கை நீளும்.
மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறமாம்.
ய
யானைப் பசிக்குச் சோளப் பொரியா?
வ
வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப்
பார்த்த திண்ணை வீடு மேல்.
வடித்த வட்டிச் சோற்றைப் பங்கிட்டாலும் தன் வாழ்க்கையைப்
பங்கிடமாட்டாள் பெண். (வட்டி - கூடை)
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
வளரும் காய் பிஞ்சிலே தெரியும்.
விளையும் பயிர் முளையிலே தெரியும்.
வளமுடன் வாழ இளமையிலே கல்.
வணங்கின புல் தழைக்கும்.
வாயில் இருக்கிறது வழி.
வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
வாய் வாழைப்பழம்; கை கருணைக் கிழங்கு.
வாழ்கிறதும் கெடுகிறதும் வாயிலேதான்.
வாழ்வு சில காலம்; தாழ்வு சில காலம்.
ந28
|
|
|