| 418 | நல்ல தமிழ் எழுத வேண்டுமா? |
வாயு பாதி; வண்ணான் பாதி.
வாழ்வதோ வீழ்வதோ அவரவர் குணத்தாலே வாய்க்கிறது.
வித்துவான் அருமை, வித்துவான் அறியவேண்டும்.
விதை ஒன்று போடச் சுரை ஒன்று காய்க்குமா?
விரதம் கெட்டாலும் சுகம் தக்க வேண்டும்.
விளையும் பயிர் முளையிலே தெரியும்.
விளையாட்டே வினையாகும்.
விருந்தும் மருந்தும் மூன்று வேளை.
வீட்டுக்கு வாய்த்தது எருமை; மேட்டுக்கு வாய்த்தது போர்.
(போர் - வைக்கோற் போர்)
வெள்ளம் வருமுன் அணைபோட வேண்டாமா?
வெளுத்ததெல்லாம் பாலா?
வேப்பெண்ணெய் விற்ற காசு கசக்குமா?
வேலியே பயிரை மேய்ந்தால் தெய்வமே காவல்.
வைரத்தைக் கொண்டே வைரத்தை அறுக்க வேண்டும்.
வௌவாலுக்கு மரமே கதி; அதன் குஞ்சுக்கும் அதுவே கதி.
|
|
|