பக்கம் எண் :

எழுத்தியல்43


குற்றியல் உகரம் (Shortened உ)

நகு - நாகு
கசு - கச்சு
படு - பண்டு
அது - அஃது
தபு - தப்பு
வறு - வயிறு

மேலுள்ளவற்றை இரண்டு இரண்டாக உச்சரித்துப்
பார்த்து எச்சொற்களில் உள்ள உகரம், ஒலியில்
நிறைந்திருக்கிறது. அஃதாவது முற்றும் உகர ஒலி
உடையதாய் இருக்கிறது என்றும், எச்சொற்களில் இருக்கும்
உகரம் ஒலியில் குறைந்திருக்கிறது என்றும் கண்டுபிடியுங்கள்.
குறுகிய ஒலியுடைய உகரமே குற்றியலுகரமாகும்.

குற்றியல் உகரம் இருக்கிற சொற்களில் இறுதியில்
கு.சு.டு,து,பு,று என்னும் எழுத்துகளுள் ஏதாவது ஒன்று கட்டாயம்
இருக்க வேண்டும். ஆனால், இதை மட்டும் கண்டு குற்றியலுகரம்
என்று கொண்டு விடுவது கூடாது. ஈற்றுக்கு அயல் எழுத்து,
அஃதாவது கடைசி எழுத்துக்கு முந்திய எழுத்து,
நெட்டெழுத்தாகவாவது வல்லின மெய்யாகவாவது மெல்லின
மெய்யாகவாவது இடையின மெய்யாகவாவது ஆய்தமாகவாவது
உயிர்மெய்யெழுத்தாகவாவது இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
இப்படியிருக்குமாயின் ஈற்றுக்கு அயலெழுத்தைக் கொண்டு இன்ன
வகைக் குற்றியல் உகரம் என்று கூற வேண்டும்.

குற்றியல் உகரம் ஆறு வகைப்படும்.

1. நெடில் தொடர்க் குற்றியல் உகரம் - பாகு, மாசு, ஆடு, ஏது, பாபு, வேறு.

இஃது இரண்டு எழுத்துகளில் வரும். இதில் முதலெழுத்து நெட்டெழுத்தாக இருக்கும். கடைசி எழுத்தானது கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகளுள் ஏதாவது ஒன்றாக இருக்கும்.

2. வன்தொடர்க் குற்றியல் உகரம் - மக்கு, தச்சு, விட்டு, பத்து, உப்பு, பற்று.