|
இஃது இரண்டு எழுத்துகளுக்கு மேற்பட்டு வரும்,
ஈற்றெழுத்தானது கு, சு, டு, து, பு, று என்பனவற்றுள் ஏதாவது
ஒன்றாக இருக்கும். ஈற்றுக்கு அயலெழுத்து வல்லின மெய்யாக
இருக்கும். க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று என்பனவற்றுள்
எதையாவது கொண்டு ஒரு சொல் முடிந்தால், அதன்
ஈற்றிலுள்ள உகரம் வன்தொடர்க் குற்றியல் உகரம் என்க.
3. மென்தொடர்க் குற்றியல் உகரம் - இங்கு, பஞ்சு,
கண்டு, பந்து, அம்பு, கன்று.
இதுவும் இரண்டு எழுத்துகளுக்கு மேற்பட்டு வரும்.
ஈற்றெழுத்தானது கு. சு, டு, து, பு, று என்பனவற்றுள்
ஒன்றாக இருக்கும். ஈற்றுக்கு அயலெழுத்து மெல்லின
மெய்யாக இருக்கும். ஒரு சொல்லானது ங்கு, ஞ்சு, ண்டு, ந்து,
ம்பு, ன்று என்பவனற்றுள் ஏதாவது ஒன்றைக் கொண்டு
முடிந்தால், இதன் ஈற்றிலுள்ள உகரம் மென்தொடர்க்
குற்றியலுகரம் என்க.
4. இடைத் தொடர்க் குற்றியல் உகரம் - செய்து, மார்பு,
சால்பு, வீழ்து.
ஈற்றெழுத்தானது கு, சு, டு, து, பு, று என்பவற்றுள்
ஒன்றைப் பெற்றும், ஈற்றுக்கு அயலெழுத்து இடையின
மெய்யெழுத்தைப் பெற்று வரின் இறுதி எழுத்திலுள்ள உகரம்
இடைத்தொடர்க் குற்றியல் உகரமாகும். ய்து,ர்பு, ல்பு, ழ்து
என்பனவற்றைக் கொண்டு ஒரு சொல் முடிந்தால். அதன்
ஈற்றிலுள்ள உகரம் இடைத் தொடர்க் குற்றியல் உகரம் என்க.
இதுவும் இரண்டு எழுத்துகளுக்கு மேற்பட்டு வரும்.
5. ஆய்தத் தொடர்க் குற்றியல் உகரம் - இஃது, எஃகு,
கஃசு, இஃதும் இரண்டு எழுத்துகளுக்கு மேற்பட்டு வரும். ஒரு
சொல்லின் ஈற்றில் கு, சு, டு, து, பு, று என்பனவற்றுள் ஒன்றைப்
பெற்றும், ஈற்றுக்கு அயலெழுத்து ஆய்த எழுத்தைப் பெற்றும்
வரின் அச்சொல்லின் ஈற்றிலுள்ள உகரம் ஆய்தத் தொடர்க்
குற்றியல் உகரம் என்க.
|