6. உயிர்த்தொடர்க் குற்றியல் உகரம் - அழகு, முரசு, கரடு, தெரியாது,
மரபு, பயறு.
இஃதும் இரண்டு் எழுத்துகளுக்கு மேற்பட்டு வரும். உயிர்த்
தொடர்க் குற்றியல் உகரத்தில் ஈற்றெழுத்தானது கு, சு, டு, து, பு, று
என்னும் எழுத்துகளுள் ஒன்றாகவும், ஈற்றுக்கு
அயலெழுத்து
உயிர்மெய்யெழுத்துகளுள் ஒன்றாகவும் இருக்கும், அழகு - ழ
என்பது
உயிர்மெய். இந்த உயிர்மெய்யில் மெய்யை நீக்கி உயிரை மட்டும் நோக்கி
உயிர்த் தொடர்க் குற்றியல் உகரம் என்க. உயிர்த் தொடர்க் குற்றியல்
உகரத்தில் ஈற்றுக்கு அயலெழுத்து உயிர் மெய்யாக இருக்கும்
என்பதறிக.
தனி நெடிலாவது வல்லின மெய்யாவது மெல்லின மெய்யாவது
இடையின மெய்யாவது ஆய்தமாவது உயிராவது தொடர்ந்து வரும்
சொல்லினது இறுதியில் கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகளுள்
ஒன்று இருக்குமானால், அதில் இருக்கும் உகரம் ஒரு
மாத்திரையிலிருந்து
குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கும். இப்படிக் குறுகி ஒலிக்கும்
உகரம் குற்றியலுகரமாகும். இஃது இலக்கண முறைப்படி கூறுவது.
ஈற்றுக்கு அயலெழுத்து உயிர்மெய்யாக வருவதை இலக்கணம் உயிர்
என்று கூறும். வல்லின மெய், மெல்லின மெய், இடையின மெய்
என்று
கூறுவதால் உயிர்மெய் எழுத்து வரும்போது அதிலுள்ள மெய்யை நீக்கி
உயிரை மட்டும் கொண்டு உயிர் என்று கூறுவது தமிழ் இலக்கண மரபு
என்பதறிக. மாத்திரை என்பது ஒலிக்கும் நேர அளவு. குற்றியலுகரத்தைப்
பற்றித் தெரிந்து கொள்வது தமிழ் அறிவுக்கு
இன்றியமையாதது.
குற்றியலிகரம்
(Shortened
இ)
குறைந்த ஒலியுடைய இகரம்
குற்றியலிகரமாகும். குற்றியலிகரம்
தெரிந்த பின்பே குற்றியலிகரம் விளங்குமாதலால், இக்குற்றியலிகரம்
பின் கூறப்பட்டிருக்கிறது.
|