|
குற்றியலுகரச் சொற்களுக்கு முன் யகரத்தை முதலாக உள்ள
சொல் வருமானால், அக் குற்றியலுகரம் இகரமாகத் திரியும்,
அவ்விகரம் குறுகியொலித்தலின் குற்றியலிகரம்
எனப்படும்.
வாத்து + யாது = வாத்தியாது.
நாடு + யாது = நாடியாது.
இது செய்யுளில் வரும். உரைநடைக்கு இது வேண்டுவதில்லை.
காடியாது என்று செய்யுளில் கண்டால், காடு + யாது என்று
பிரிக்கத்
தெரிந்து கொள்க.
முற்றியல் உகரம் (Full Sound
உ)
1. உ,சு. - தனியாக உள்ள
உயிரெழுத்து உகரமும், தனியாக
உள்ள உயிர்மெய் எழுத்திலுள்ள உகரமும் முற்றியல்
உகரமாகும்.
2. நகு, பசு, எது, தபு, மறு, அணு, இரண்டு குறிலாக வருகின்ற
சொல்லின் ஈற்றில் கு, சு, டு, து, பு, று, ணு, மு, னு, யு, ரு, லு, வு, ழு,
ளு என்னும் எழுத்துகளுள் எது இருந்தாலும், அவ்வெழுத்திலுள்ள
உகரம் முற்றியல் உகரமாகும்.
3. வேணு, கதவு, வேலு. இரண்டு எழுத்திலோ, இரண்டு
எழுத்துகளுக்கு மேற்பட்டோ வரும். சொல்லின் ஈற்றில் கு, சு, டு, து,
பு, று தவிர, மற்ற ணு, மு, னு, யு, ரு, லு, வு, ழு, ளு என்னும்
எழுத்துகளுள் ஏதாவது ஒன்றிருந்தாலும், அதிலுள்ள உகரமும்
முற்றியல் உகரமாகும்.
முற்றியல் உகரத்திற்கு வகை
இல்லை.
குறிப்பு : குற்றியல் உகரத்திற்கும் முற்றியல் உகரத்திற்கும்
உள்ள வேறுபாட்டை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்,
இவ்வறிவு
சந்தி இலக்கணத்திற்குப் பயன்படும்.
மாத்திரை (Measure of Times or time unit of Letters)
கண்ணிமைப் பொழுதும் கைந்நொடிப் பொழுதும்
மாத்திரை
எனப்படும். இன்ன இன்ன எழுத்தை இவ்வளவு இவ்வளவு
நேரம்
|