பக்கம் எண் :

எழுத்தியல்47


ஒலிக்க வேண்டும் என்பது மொழியின் அறிவியல் நிலையை
எடுத்துக்காட்டுகிறது. இச்சிறிய மணித்துளி அளவையும் பாகுபாடு
செய்து கூறியிருப்பதைப் பாருங்கள் :

"உன்னல் காலே ஊன்றல் அரையே
முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே."

நினைப்பது
இரண்டு விரல்களை ஊன்றல்
இரண்டு விரல்களை முறுக்கல்
விடுத்தல்
கால் மாத்திரையாம்;
அரை மாத்திரையாம்;
முக்கால் மாத்திரையாம்;
ஒரு மாத்திரையாம்,

இத்தகைய அறிவியல் முறையில் மாத்திரையை விளக்குவது வியப்பளிக்கிறது.

1. மெய்யெழுத்து,
குற்றியலிகரம்,குற்றியலுகரம், ஆய்தம்.
1/2 மாத்திரை
(ஒவ்வொன்றுக்கும்)
2. உயிர்க் குறில், உயிர்மெய்க் குறில். 1 மாத்திரை
3. உயிர் நெடில், உயிர்மெய் நெடில். 2 மாத்திரை

சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகள் (Initial Letters)

12. உயிரெழுத்துகளும் க, ச, ஞ, ட, த, ந, ப, ம, ய, ர, ல, வ
என்னும் எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வரும்.

ங, ண, ழ, ள, ற, ன ஆகிய எழுத்துகள் சொல்லுக்கு முதலில் வாரா.

ங என்னும் எழுத்து, சொல்லுக்கு முதலில் வருவதாய்ச்
சொல்லப்பட்டிருப்பினும், இக்காலத்தில் அது வருவதில்லை.