அ, இ என்னும் சுட்டெழுத்துகளோடும் எ, யா என்னும் வினா
எழுத்துக்களோடும் சேர்ந்து அங்ஙனம், இங்ஙனம் என்றும். எங்ஙனம்,
யாங்ஙனம் என்றும் வரும். ஒரு சிலர் அங்கனம், இங்கனம்,
யாங்கனம்
என்றெழுதுவதும் உண்டு.
|
உயிர் -
|
அறம், ஆடு, இலை, ஈட்டி,
உரல், ஊர், எருது,
ஏர், ஐயம், ஒன்று, ஓடம், ஒளவை.
|
|
க -
|
கல், கால், கிளி, கீரி, குறி,
கூறு, கெடுதல், கேடு,
கைப்பு,கொக்கு, கோது, கௌவை.
|
|
ங -
|
இக்காலத்தில் இது சொல்லுக்கு
முதலில் வாராது.
|
|
ச -
|
சட்டி, சார்தல், சிரிப்பு, சீர், சுடுதல்,
சூடு, செதில்,
சேர்,சைகை, சொல், சோர்வு, சௌக்கியம்.
|
|
ஞ -
|
ஞமலி, ஞாலம், ஞெகிழி,
ஞொள்கல். ஞகர வரிசையில்ஞ, ஞா, ஞெ, ஞொ.என்பவை
மட்டும்
சொல்லுக்கு முதலில் வரும்;மற்றவை வாரா.
(ஞமலி - நாய், ஞாலம் - உலகம்; ஞெகிழி
கொள்ளிக்கட்டை; ஞொள்கல் - இளைத்தல்)
|
|
ட -
|
டகரம் சொல்லுக்கு முதலில் வாராது
என்று
கூறியது தமிழ்ச் சொற்களைக் குறித்ததே ஆகும்.
|
டங்கன் துரையை இடங்கன் துரை என்று எழுதலாமா? டயர்
என்னுஞ் சொல்லை இடயர் என்று சொன்னால் பொருள் மாறாதா? டில்லி
என்று எழுதாமல் இடில்லி என்று எழுதினால் என்ன பொருள்
ஏற்படும்?
அதனால், இச்சொல் இக்காலத்தில் தில்லி என்று எழுதப்படுகிறது.
டென்மார்க் என்னுஞ் சொல்லை இடென்மார்க்கு என்று எழுதினால்
பொருள் மாறுபடாதா? ஆதலின், இக்காலத்தில் டகரம் பிறமொழிச்
சொற்களில் மொழி முதல் எழுத்தாக வரும் எனக் கொள்க.
|