பக்கம் எண் :

எழுத்தியல்49

ண - இது சொல்லுக்கு முதலில் வாராது.
த - தந்தை, தாய், தினை, தீமை, துணை, தூண்,
தென்னை,தேன், தையல், தொன்மை, தோள்.
தௌவல், (தௌவல் - கெடுதல்)
ந - நன்றி, நாடு, நிலம், நீர், நுனி, நூல், நெல், நேர்மை,
நைந்து,நொச்சி, நோக்கம், நௌவி.
ப - பன்றி, பாடு, பிஞ்சு, பீடு, புவி, பூடு, பெண்,
பேதை,பையன், பொன், போதல், பௌர்ணமி.
ம -

மண், மான், மின்னல், மீன், முளை, மூளை, மெய்,
மேன்மை,மையம், மொட்டு, மோனை, மௌனம்.

ய - யமன், யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம்.

யகர வரிசையில் யி, யீ, யெ, யே, யை,
யொ ஆகியவை சொல்லுக்கு முதலில் வாரா.

ர - இக்காலத்தில் ரகரமும் பிறமொழிச் சொற்களில்
மொழிமுதல் எழுத்தாக வரலாம். தொன்று தொட்டு
அரங்கநாதன், இராமன், இராமாயணம் என்று
எழுதுவதை நாம் இன்றும்
மேற்கொள்வதால்தவறில்லை. ஆனால்.
எல்லாவற்றையும் அப்படியே எழுத
வேண்டுவதில்லை. ரதம் என்னும் சொல்லை இரதம்
என்று எழுத வேண்டுவதில்லை. ரப்பர்என்னும்
சொல்லை இரப்பர் என்று எழுதினால் யாசிப்பர்
என்றன்றோ பொருள்படும்? ஆதலால், தொன்று
தொட்டு எழுதி வருவதற்கு மட்டும்அகரம் இகரம்
பெய்து எழுதுவோம். மற்றவற்றிற்கு அவ்வாறு செய்ய
வேண்டுவதில்லை.

ந5