பக்கம் எண் :

வாழ்க்கை வரலாறு எழுதும் முறை 443

தாங்கள் பாடிய நாந்திச் செய்யுள்களில் தங்கள் பெயர்களைக்
குறிப்பிட்டதனாலே இன்று அவர்கள் பாடிய பாடல்கள் இவை இவை
என அறிகிறோம். ‘நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்’, ‘கற்றுணர் கேள்விக்
காழியர் பெருமான் கருத்துடை ஞானசம்பந்தன்’ (திருக்கோணமலைப்
பதிகம் -11) என்பவை போன்ற குறிப்புகள் நாந்திச் செய்யுள்
என்னும் திருநாமப்பாக்களில் இருக்கக் காணலாம். இத்தகைய
குறிப்புகளை நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய பாக்களிலே
காண்கிறோம்.

கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பி, சைவ
சமய அடியார்களின் வாழ்க்கைக் குறிப்புகளை இயற்றினார்.
பிற்காலத்தில் தோன்றிய பாண்டி மண்டல சதகம், சோழமண்டல
சதகம் ஆகியவை நூலாசிரியர்களுடைய வரலாற்றுக் குறிப்புகளை
மிகமிகச் சுருக்கமான செய்யுள்களில் தெரிவித்துள்ளன.
கி.பி. 1650-க்கும் 1728-க்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த ஆத்மநாத
தேசிகர் என்பார் சோழமண்டல சதகத்தை இயற்றினார்.
கி.பி. 17வது நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த படிக்காசுப் புலவர்
தொண்டை மண்டல சதகத்தைப் பாடினார். படிக்காசுப் புலவருக்குப்
பிற்பட்டவர், பாண்டி மண்டல சதகத்தை இயற்றினார். இவர் மதுரையில்
வாழ்ந்த வீரபூதி என்பாரின் மைந்தரான ஐயன்பெருமாள் பிள்ளை
ஆவார். கி.பி.17-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர், கொங்கு மண்டல
சதகத்தை இயற்றினார். இவரது பெயர் கார்மேகக் கவிஞர். கம்பரை
ஆதரித்த சடையப்ப வள்ளலைச் சோழ மண்டல சதக ஆசிரியர்
சோழ நாட்டினர் என்றும் பாண்டிய மண்டல சதக ஆசிரியர் பாண்டி
நாட்டினர் என்றும் ஊர்ப்பற்றினால் தத்தம் நாட்டினர் என்றும்
குறிப்பிட்டுள்ளார்கள். உண்மையில் சடையப்ப வள்ளல் சோழ
நாட்டினராவார். இத்தகைய முறையில் இந்நூல்கள் வாழ்க்கைக்
குறிப்புகளைக் கூறலாயின. உண்மையை உணர்வதற்கு இவை