பெரிதும் பயன்படுவதாக இல்லை. தண்டபாணி சுவாமிகள் புலவர்
புராணம் என்னும் நூலை இயற்றினார். உண்மையற்ற தன்மையிலேதான்
நம் நாட்டுப் பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்
தோன்றின.
கி.பி. 1891ல் தோன்றி ‘விநோத ரச மஞ்சரி’ என்ற நூலானது
உண்மை வாழ்க்கை வரலாற்றைக் கூறாமல் கட்டுக் கதைகளாகவே
கம்பர், ஒளவையார் வரலாறுகளை வெளியிட்டது. பாரி முதலான
வள்ளல்களைப் பற்றியும் சங்கப் புலவர் பெருமக்களைக் குறித்தும்
அந்நாளில் வந்துள்ள வாழ்க்கை வரலாறுகளும் ஒரு சிறு
குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு யூகத்தினாலும்
கற்பனையாலும் விற்பனைக்கு வெளிவந்த வாணிகச் சரக்குகளே
அல்லாமல் உண்மையான வரலாறுகள் அல்ல. ஒரு சிலவே அரிய
ஆராய்ச்சியால் முகிழ்த்த வரலாற்றுக் குறிப்புகள்.
உண்மையான வாழ்க்கை வரலாறுகள் தமிழில் இந்த இருபதாம்
நூற்றாண்டின் முற்பகுதியில் வந்த ஒரு சிலவே தவிர வேறு
இல்லை.
டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் முதல் முதலாகத் தம்
ஆசிரியரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை வாழ்க்கை வரலாற்றை
இரண்டு பாகங்களாக வெளியிட்டார். இஃது ஒன்றே தமிழில்
நன்முறையில் வெளிவந்த ஒரு சில வாழ்க்கை வரலாறுகளுள்
தலைசிறந்து விளங்குவது. தமிழில் உண்மையான வாழ்க்கை வரலாறுக்கு
அவரே தந்தை எனலாம்.
அண்மையில் வாழ்ந்து மறைந்த புலவர் பெருமக்களையோ
அறிஞர் பெருமக்களையோ தெரிந்தவர்கள் அப்பெருமக்களுடைய
உண்மையான வாழ்க்கை வரலாறுகளை நூல்களாக வெளியிட்டுத்
தமிழகத்துக்குத் தொண்டு புரியலாம்.
வரலாறு வேறு; வாழ்க்கை வரலாறு வேறு. வரலாறு நாட்டில்
நடந்த நிகழ்ச்சிகளைக் கூறும். வாழ்க்கை வரலாறோ
|