பக்கம் எண் :

சில காரணப் பெயர்களின் வரிசை 475

அரை - ஒவ்வொருவர் உயரத்தில் அரைப் பகுதியாக
இருப்பதால் இடுப்பு, அரை எனப்படும்.
அறை - வீட்டு அறை. பகுதி பகுதியாக வரையறுக்கப்
படுவதால் ஒரு பகுதி அறை எனப்படுகிறது.
ஆப்பு - பெரிய கட்டையைப் பிரித்தற்குப் பிளவில்
இடுகின்ற சிறு கட்டை. (ஆழ்+பு=ஆப்பு)
ஆறு - வழியை அறுத்துக் கொண்டு ஓடுவது. (நதி)
இறைவன் - எல்லாப் பொருள்களிலும் தங்கியிருப்பவன்.
இடுக்கண் - கண் இடுங்கும்படியாக உள்ள அளவு கடந்த
துன்பம்.
உடம்பு, உடல் - உயிருக்கு உடை போல இருப்பது.
உலகம் - நீர் உலர்ந்ததால் ஏற்பட்டது உலகம்.
உள்ளம் - மனம் உள்ளுவதற்கு - நினைப்பதற்கு-இடமாய்
இருப்பது. மனம் என்பது மூளையிலிருப்பது.
இருதயத்தில் இருப்பதாக நினைப்பது தவறு.
ஊருணி - ஊராரால் உண்ணப்படும் நீரையுடையது.
எண்ணெய் - எள்ளிலிருந்து எடுக்கப்படுவது.
(எள்+நெய்) - விளக்கெண்ணெய், மண்ணெண்ணெய் ஆகிய
வற்றில் எண்ணெய் என்பது தன் பொருள் இழந்து
‘‘oil” என்னும் பொருளில் நிற்கிறது.
எருது - ஏர் உழுதற்கு உரியது.
ஏமாற்றுதல் - ஏமம் - காவல்; மாற்றுதல் - நீங்கச் செய்தல்.
(ஏய்த்தல்)
ஏரி - ஏர்த் தொழிலுக்கு உதவுவது.