பக்கம் எண் :

476

நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


ஒத்திகை - ஒத்து இருக்கை. நாடகம் நல்ல முறையில்
ஒத்திருக்கிறதா என்று பார்த்தால்.
ஓநாய் - கோணாய் என்பது ஓநாய் என மருவிற்று.
(கோள்+நாய்-கோணாய். கோள் - வலிமை)
கடல் - கடப்பதற்கு அரியது என்று முற்காலத்தில்
கருத்தப்பட்டதால் கடல் எனப்பட்டது.
கடை - நெடுஞ்சாலை வழியாகப் போகிறவர்களுக்கும் ஊரில
இருப்பவர்களுக்கும் பயன்படும் படியாகப் பண்டைக்
காலத்தில் ஊருக்குக் கடைப் பகுதியில்
வைக்கப்பட்டிருந்ததால் வாணிகம் நடந்த அவ்விடம்
கடை எனப்பட்டது.
கரி - கருநிறமுடையது கரி எனப்படும். (யானை)
கண் - எல்லாவற்றையும் காணும் இடமாயிருப்பது.
காது - உயிரைக் காப்பதற்கு உரியது. (கா-பகுதி)
காலம் - பருவக்காற்றால் ஏற்படுவது. (கால் - காற்று)
கிளி - கிள்ளித் தின்பது கிளி.
கிழக்கு - பள்ளமாயிருக்கும் திசை.
குடை - குடைவாய் இருப்பது.
குடம் - உட்பகுதி குடைவாய் - வளைந்து - இருப்பது.
குரங்கு - முதுகெலும்பு வளைந்திருப்பது.
குதிரை - குதித்து ஓடுவது.
குடல் - வளைந்திருப்பது.
குடுவை - குறுகிய வாயை உடையது.
கும்மி - குழுமிக் கை கொட்டியடிப்பது.
குளம் - குளிப்பதற்குரியது.