|
புல்லாங்குழல் -
| புல்லால் (மூங்கிலால்) செய்யப்படுவது. (புல்-மூங்கில்)
|
|
புழைக்கடை -
|
வீட்டின் கடைப் பகுதியிலிருக்கும் வாயில் பக்கம்.
(புழை - வாயில்)
|
|
பூசை -
|
தமிழ்ச் சொல் - பூவினால் வழிபாடு செய்தல்.
ஆரியர் பூவினால் வழிபாடு செய்வதில்லை.
(மொழிநூலறிஞர் சுனிதி குமார் சட்டர்ஜி கூறியது)
|
|
பெண் -
|
பேணுதற்கு (காப்பதற்கு) உரியவள்.
|
|
பொம்மை -
|
பொய்மை வடிவம் உள்ளது.
|
|
பொருள் -
|
பொருதலைச் செய்து (போர் செய்து) பெற்றது
பண்டைக்கால வழக்கமாதலால், செல்வம் பொருள்
எனப்பட்டது. |
|
மணம் -
|
கூடுதல். ஒரு பெண்ணையும் ஓர் ஆணையும்
பலர் அறிய வாழ்வு நடத்தச் சேர்த்து வைத்தல்.
|
|
மரம் -
|
தரையோடு மருவி நிற்பது. பொருளறியாததால்
சிலர் மரத்தை இடுகுறிப் பெயர் என்றனர்.
|
|
மருந்து -
|
சாவைத் தாராமல் இருப்பது.
|
|
மலை -
|
மல்லலை (வளப்பத்தை) உடையது மலை.
|
|
மன்றம் -
|
மரம் உள்ள மக்கள் கூடும் இடம். மரன் + று =
மரன்று-மன்று. ஆம் சேர்ந்து மன்றம் என்றாயிற்று.
|
|
முன்தானை -
|
சேலையின் முற்பகுதி. தானை - துணி.
|