பக்கம் எண் :

சில காரணப் பெயர்களின் வரிசை 480

மூளை - கருத்துகள் முளைப்பதற்கு உரியது மூளை. இம்
மூளையில்தான் மனம் இருக்கிறது; இருதயத்தில்
இல்லை.
மூஞ்சி - முன் இருப்பது. முந்தி என்பது மூஞ்சி எனத்
திரிந்தது. தெலுங்கில் மூன்தி என்று
வழங்குகிறதாம்.
மேற்கு
(மேல்+கு) -
மேடாய் இருப்பது.
வண்ணான் - மலையாளத்தில் இச்சொல் மண்ணான் என
வழங்குகிறதாம். மண்ணுதல்-கழுவுதல். துணியைத்
துவைத்துத் தருபவன். தமிழில் மகரம்
வகரமாயிற்று.
வயிறு - வாயின் இறுதி வயிறு.
வாய் - உணவு செல்வதற்குரிய வழி.
விதவை - கணவனோடு வாழும் தவம் இல்லாதவள்.
விநாயகர் - தனக்குமேல் தலைவன் இல்லாதவர். (வினாயகர் என்றெழுதுவது தவறு)
விரல் - விரிந்திருப்பது.
விலங்கு - முதுகெலும்பு குறுக்கே இருப்பது.
விழா - விழைந்து (விரும்பி) நடத்துவது.