பக்கம் எண் :

ஐயமுறும் சொற்களின் வரிசை 484

எரு
எல்லாரும்
(இது செய்யுளில் வரும்)
எழுதல் (எழுந்திருத்தல்)
எழுதுதல் (எழுதுவது)
எல்லை (எல்கை - தவறு)
என்னவோ (என்னமோ - தவறு)
ஏமாந்து (இன்புற்று)
ஏமாறி (மோசம் போய்)
ஏமாற்றமடைந்தான்
(ஏமாந்து போனான் - தவறு)
ஏரி (ஏருக்கு உதவுவது)
ஏறி (வண்டி ஏறி)
ஏறக்குறைய
ஏறத்தாழ
ஏறுமாறாக
ஏற்பாடு
ஏழைமை (வறுமை)
ஏழ்மை (ஏழாகுந்தன்மை)
ஐந்நூறு (500)
ஐவைந்து (ஐந்து ஐந்து)
ஒருகாலும் (பொருளற்றார் பூப்பர் ஒரு கால் -
குறள் - 248)
ஒரு கூறு
ஒருவர்க்கு (ஒருவருக்கு)
ஒருவற்கு (ஒருவனுக்கு)
ஒவ்வொரு சொல்லும்
(ஒவ்வொரு சொற்களும் -
தவறு)
ஒற்றை
ஒரு (ஒன்று)
ஒறு (தண்டனை கொடு)
ஒளிர்தல் (ஒளிசெய்தல்)
ஒளித்தாய் (மறைத்தாய்)
ஒழித்தாய் (நீக்கிவிட்டாய்)
ஒற்றையடிப் பாதை
(ஒற்றடிப் பாதை - தவறு)
ஓய்வு ஒழிவு இல்லை
ஓரகத்தி (ஓரவத்தி - தவறு)
ஓரம்
ஓநாய் (கோணாய் என்பதன்
மரூஉ - களவழி நாற்பது
செய் - 34, கோள் + நாய்-
கோணாய், கோள்-வலிமை)
கற்பவை
கடற்கரை
கடைசி (கடாசி, கடைசீ-தவறு)
கடைத்தேறினான்
கட்சி
கடப்பாரை (ஒரு கருவி)
கட்டடம் (அடம் - விகுதி)
கட்டிடம் (வீடு கட்டும் மனை)
கட்டுரை
கண்டு களிகூருங்கள்
(கண்டு களிப்பு மிகுதியாக
அடையுங்கள்)
கண்ணி (காடை போன்ற
பறவைகளை வலையில்
வைத்தபடி விற்கும் இடம்)
கத்தரிக்கோல்