பக்கம் எண் :

485நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

கத்தரிக்காய்
கயிறு
கரம்பு நிலம்
கருகி விட்டது
கருத்து (எண்ணம்)
கருப்பு (பஞ்சம்)
கறுப்பு (கருநிறம்)
கருமை நிறம்
கருவாடு
கறையான் (செல்)
கல்லறை
கரி (அடுப்புக்கரி, யானை)
கறி (காய்கறி, இறைச்சி)
கறிவேப்பிலை
கறுப்பர் (கருநிறத்தார்)
கற்றை விறகு (கத்தை - தவறு)
கற்றூண்
கற்பு
கற்பாறை
கன்னன் (கர்ணன்)
கண்ணன் (கிருஷ்ணன்)
களிப்பேன் (மகிழ்வேன்)
கழிப்பேன்
காட்சி (காக்ஷி-தவறு)
காத்தருள் (கார்த்தருள் - தவறு)
காரணம்
காற்றாடி
கிணறு
கிருமி
கிளறிவிடு
கிளர்ச்சி
கிறுக்கு
கிழக்குப் பக்கம்
கீறி (தரையைக் கீறி)
கீழ்க்கடல்
கீழ்க்காற்று
கீழ்க்கணக்கு
கீழ்த்திசை
குடிக்கூலி (குடக்கூலி - தவறு)
குடை (குடைவாயிருப்பது)
குமுறினான் (உள்ளம் குமுறினான்)
குரவர் (பெரியோர்)
குறவர் (ஒருவகை இனத்தார்)
குற்றுதல் (நெல் குற்றுதல்)
குத்துதல் (முதுகில் குத்துதல்)
குறட்டை விடுதல்
குறிப்பிடுகிறேன்
குறிக்கோள்
குறுக்குத்தெரு
குளம் (குளிப்பதற்குரியது)
குலம் (சாதி)
கூட்டுக்கறி
கூரிய (கூர்மையான)
கூறிய (சொன்ன)
கூரை (மேற்கூரை)
கூறை (புதுத் துணி)
கூறுங்கள் (சொல்லுங்கள்)
கூருங்கள் (மிகுதியாக
அடையுங்கள்)
கேட்கிறார்
கேட்பார்
கேள்வி
கேழ்வரகு
கைக்குட்டை