பக்கம் எண் :

ஐயமுறும் சொற்களின் வரிசை 492

வறட்சி (வறு-பகுதி)
(‘கொண்ட கொழுநன்’)
குடிவறன் உற்றென-
நற்றிணை-110)
(‘வானம் வறக்குமேல்’)
(குறள் வான்சிறப்பு)
(நீர் அற வறந்த நிரம்பா
நீளிடை’-அகநானூறு
பா-53, வரி-5)
வறட்டி
வறண்டு விடும்
வறுமை
வறுவல் (கிழங்கு வறுவல்)
வண்மை (கொடைத்தன்மை)
வன்மை (ஆற்றல்)
வணிகன்
வள்ளி திருமணம்
வாணிகம் (வாணிபம் - தவறு)
வாக்குறுதி
வாய்பாடு
(Table)
வாய்ப்பாட்டு
(Vocal Song)
(வாயினால் பாடும் பாட்டு)
வாய்க்கால்
வாரினான் (தலை வாரினான்)
வார வழிபாடு
வார்த்தான்
வாழைத்தாறு
வாழைநார்
வாழ்க்கைத்தரம்
விசிறி
விடியற்காலம்
விதை விதைத்தல் (விரை-தவறு)
விநாயகர்
வியர்வை (வேர்வை - மரூஉ)
விரைந்து போனான்
விரட்டுகிறான்
விரல்
விரலி (விரலையுடையவன்)
விறலி (மனத்துள்ளிருக்கும்
கருத்தின் சுவை இயல்பாக
உடற்கூறுகளில் தோன்றுமாறு
நடித்துக்காட்டும் இளம்பெண்)
விருந்து
விருப்பு வெறுப்பு
விறுவிறுப்பு
விறைத்துப் போயிற்று
விற்கப்படும்
விளம்பரம்
விழி (முழி - தவறு)
வீறாப்புப் பேசுதல்
வீழ்ச்சி
வெப்ப தட்பநிலை
வெண்ணெய்
வெந்நீர்
வெயில் (வெய்யில் - தவறு)
வெறி
வெறுத்துவிடு
வெவ்வேறு (வேறு வேறு)
வேங்கடராமன் (வெங்கடராமன்,
வெங்கட்ராமன் - தவறு)
வேங்கடசாமி (வேங்கிடசாமி-தவறு)
வேட்கை
வேர்க்குரு
வேளாளர்
வேளாண்மை
வேறுபாடு
வைக்கோல்
(வைக்கல்-தவறு)